கச்சாய்-கெற்பொலி -ஆனையிறவு 10.28Km வீதி புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு

#SriLanka #Road #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
கச்சாய்-கெற்பொலி -ஆனையிறவு 10.28Km வீதி புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன், இரண்டாவது ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி முதலீட்டு திட்டத்தின் கீழ், பச்சிலைப்பள்ளி மற்றும் தென்மராட்சி பிரதேசங்களை இணைக்கும் கச்சாய்–கெற்பொலி–ஆனையிறவு வீதி புனரமைப்புத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (31.07.2026) கிளிநொச்சி கிளாலி சந்தியில் நடைபெற்றது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதியமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் தர்மலிங்கம் பாஸ்கரன், பச்சிலைப்பள்ளி மற்றும் தென்மராட்சி பிரதேச செயலாளர்கள், அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 17.36 கிலோமீட்டர் நீளமுடைய வீதிகள் புனரமைக்கப்படவுள்ளதுடன், இதற்காக ரூ. 746.7 மில்லியன் செலவிடப்படவுள்ளது. 

புனரமைப்புப் பணிகள் 15 மாதங்களுக்குள் நிறைவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4