அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று கணக்குகளில் வரவு!

#SriLanka #Lanka4 #Account #citizen #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY
Abi
1 hour ago
அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று கணக்குகளில் வரவு!

அஸ்வெசும திட்டத்தின் கீழ் ஜூலை மாதத்திற்கான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான நலன்புரி கொடுப்பனவு இன்று (31) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படுவதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக 621,638 முதியோருக்காக ரூ. 310.81 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாம் கட்டத்தில் 77,324 முதியோருக்காக ரூ. 38.66 கோடி வைப்பிலிடப்படவுள்ளது.

இதன்படி, இரண்டு கட்டங்களிலும் 698,962 பயனாளிகளுக்கு மொத்தமாக ரூ. 349.48 கோடி வழங்கப்படவுள்ளது.

அஸ்வெசும பயனாளிகள் இன்று முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவை தங்களது பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்குகள் ஊடாக பெற்றுக்கொள்ளலாம் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4