சட்டவிரோதமாக ஸ்பெயினை அடைய முயன்றோரின் பலி எண்ணிக்கை உயர்வு - 57 பேரின் உடல்கள் மீட்பு!
#SriLanka
#migrants
#Spain
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
ஸ்பெயினில் ஒரேநாளில் 60000 இற்கும் அதிகமான சட்டவிரோத குடியேறிகள் பிரவேசித்ததை தொடர்ந்து பதற்றமான நிலை நிலவியது.
இந்நிலையில் தற்போது இந்த பிரச்சினை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதேநேரம் சியூட்டாவில் உள்ள ஸ்பானிய அரசாங்கப் பிரதிநிதி, எல்லை பகுதியில் 57 புலம்பெயர்ந்தோரின் உடல்களை மீட்டதாக அறிவித்துள்ளார்.
மொராக்கோப் பகுதியிலும் கூடுதல் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்றும் கூறினார். எல்லை வேலியைத் தாங்கி நிற்கும் அலைத்தடுப்புச் சுவரில் ஏற முயன்றபோது சிலர் நீரில் மூழ்கியும், சிலர் நசுக்கப்பட்டும் உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார்.