பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்: ருமேஷ் தரங்க வரலாற்றுச் சாதனை!
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில்,ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இலங்கையின் இளம் வீரர் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இறுதிச் சுற்றில் ஈட்டியை 89.75 மீட்டர் தூரம் எறிந்து அவர் முதலிடத்தைப் பிடித்தார்.
இந்தப்போட்டியில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா, இரண்டாம் இடத்தையும் யஸ்வீர் சிங் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்; இதன்படி, பொதுநலவாய போட்டிகளின் ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கை பெறும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை தங்கப் பதக்கம் வென்று 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ருமேஷ் தரங்கவின் இந்த வெற்றி நாட்டின் விளையாட்டு வரலாற்றில் சாதனையாக அமைந்துள்ளது.
இதற்கு முன்னர், கடந்த 2006 ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற பொதுநலவாயப்போட்டியில் பளுதூக்குதல் வீரர் சிந்தன விதானகே இலங்கைக்காகத் தங்கம் வென்றார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே