யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் இரட்டைச் சகோதரிகள் தீயிட்டு தற்கொலை

#SriLanka #Jaffna #Death #Lanka4 #Girl #twins #L4
Prasu
1 hour ago
யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் இரட்டைச் சகோதரிகள் தீயிட்டு தற்கொலை

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டம் புன்னாலைக்கட்டுவன் வடக்கு, குப்பிளான் பகுதியில் அபர்ணா, அபிநயா எனும் இரட்டைச் சகோதரிகள் அகால மரணம் அடைந்துள்ளனர்.

அன்பும் பாசமும் நிறைந்த குடும்பத்தில் ஒன்றாக வளர்ந்து, கல்விப் பயணத்திலும் ஒன்றாக பயணித்த இருவரும் தமக்குத் தாமே தீயிட்டு உயிர் மாய்த்து கொண்டுள்ளனர்.

இவர்கள் தமது ஆரம்பக் கல்வியை குப்பிளான் விக்கினேஸ்வரா வித்தியாலயத்திலும், இடைநிலை மற்றும் உயர்தரக் கல்வியை வயாவிளான் மத்திய கல்லூரியிலும் கற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு சகோதரிகளின் அகாலப் பிரிவு குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கல்விச் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

இவர்கள் இருவரும் தமக்குத் தாமே தீயிட்டு காயங்கள் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். 

தமக்கு வாழப் பிடிக்கவில்லை என்ற காரணத்தினால் தான் இவ்வாறான முடிவை எடுத்ததாக அவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர் என்பது இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டிய காரணம் ஆகும்.

அபர்ணா – அபிநயா ஆகிய இரு சகோதரிகளின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம். அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4