அக்டோபர் 7 தாக்குதலில் கொல்லப்பட்ட காதலியின் கல்லறையில் தற்கொலை செய்துகொண்ட நபர்
அக்டோபர் 7 அன்று நோவா இசை விழாவின் போது காயமடைந்தவர்களுக்கு உதவி செய்துகொண்டிருந்தபோது ஹமாஸால் கொலை செய்யப்பட்ட 26 வயதுப் பெண்ணின் காதலன், அவரது கல்லறையில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 வயதான பார் அஸ்ராஃப், சனிக்கிழமையன்று லிரோன் பர்தாவின் கல்லறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அவர் மகிழ்ச்சியாகக் காணப்பட்டாலும், உற்சாகமாகப் பாடி நடனமாடினாலும், அவர் "மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்" என்று தெரிவித்துள்ளனர்.
லிரோனுக்குப் பதிலாக வேறு யாரும் இல்லை என்றும், தன்னை "மகிழ்விக்க" யாரும் இல்லை என்றும் அஸ்ராஃப் தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமையன்று, திருமண நிகழ்வு ஒன்றிற்கு பிறகு அவரைக் கண்டுபிடிக்க முடியாததால், குடும்பத்தினர் அவரைத் தேடத் தொடங்கினர்.
"அவர் எங்கே சென்றிருக்கலாம் என்று நாங்கள் யோசித்து, லிரோனின் கல்லறையைச் சென்று பார்த்தபோது அஸ்ராஃப் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே