நீதி அமைச்சின் 2026 திட்டங்கள் மீளாய்வு: 2027 வரவு செலவுத் திட்டம் குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆலோசனை

#SriLanka #Minister #Project #Lanka4 #President #budget #AnuraKumaraDissanayake #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
நீதி அமைச்சின் 2026 திட்டங்கள் மீளாய்வு: 2027 வரவு செலவுத் திட்டம் குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆலோசனை

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

அமைச்சின் கீழ் செயல்படும் திணைக்களங்கள், அரச சபைகள் மற்றும் நிறுவனங்கள் முன்னெடுத்துள்ள திட்டங்களின் நிதி மற்றும் செயற்பாட்டு முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டதுடன், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களும் ஆராயப்பட்டன.

இதன்போது நீதித்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாக மேம்படுத்துவதன் மூலம் பொதுமக்களுக்கு துரிதமான மற்றும் திறன் மிக்க நீதிச் சேவையை வழங்கக்கூடிய நீதிமன்ற அமைப்பை உருவாக்குவது அவசியம் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4