இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இலங்கைக்கு வருகை!

#SriLanka #Lanka4 #Indian #foreign #Secretary #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 hour ago
இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இலங்கைக்கு வருகை!

இந்தியா – இலங்கை இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (5) கொழும்பை வந்தடைந்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளை அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இலங்கை – இந்தியா இடையிலான உயர்மட்ட தொடர்புகள் தொடர்ந்து வலுப்பெற்று வரும் நிலையில், இந்த விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துதல் மற்றும் முக்கிய கூட்டுத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் இந்த சந்திப்புகளில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4