ஆகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலை மாற்றமின்றி தொடர்கிறது!

#SriLanka #prices #Litro Gas #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 hour ago
ஆகஸ்ட் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலை மாற்றமின்றி தொடர்கிறது!

ஆகஸ்ட் மாதத்துக்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்தவித திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள விலையிலேயே அனைத்து எரிவாயு கொள்கலன்களும் தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு கொள்கலன் ரூ. 4,465, 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் ரூ. 1,792, மற்றும் 2.3 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் ரூ. 835 என்ற விலைகளில் விற்பனை செய்யப்படும்.

எனவே, ஆகஸ்ட் மாதம் முழுவதும் நுகர்வோர் தற்போது உள்ள அதே விலைகளில் லிட்ரோ எரிவாயுவை கொள்வனவு செய்ய முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4