நீர்கொழும்பு பல்லன்சேன திறந்தவெளி சிறைச்சாலையில் பதற்றம்

#SriLanka #Prison #Negombo #Lanka4 #air #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
நீர்கொழும்பு பல்லன்சேன திறந்தவெளி சிறைச்சாலையில் பதற்றம்

நீர்கொழும்பு, தலுபொத – பல்லன்சேன திறந்தவெளி சிறைச்சாலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சிறைச்சாலை கட்டிடத்தின் கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சிறைச்சாலை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4