தேசிய கைத்தறி தினத்தை கொண்டாட இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி

#India #government #Day #Lanka4 #NarendraModi #L4 #Handloom
Prasu
1 hour ago
தேசிய கைத்தறி தினத்தை கொண்டாட இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 7ம் திகதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. 

கைத்தறி நெசவாளர்களின் உழைப்பைப் போற்றவும், நாட்டின் பாரம்பரிய கைத்தறித் தொழிலை மேம்படுத்தவும், சுதேசி இயக்கத்தின் நினைவாகவும் 2015ம் ஆண்டு முதல் இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி, இன்றைய இளைஞர்கள் கைத்தறி ஆடைகளை கொண்டு வீடியோக்களை உருவாக்கி, தேசிய கைத்தறி தினத்தை கொண்டாட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் 1905ம் ஆண்டில் ஆகஸ்ட் 7ம் திகதி சுதேசி இயக்கம் தொடங்கப்பட்ட வரலாற்றுவு சிறப்பையும் நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, அந்த நாளில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் ஒன்றிணைந்ததாகவும், இந்தியாவின் கைத்தறி நெசவின் பன்முகத்தன்மையை பிரபலமாக்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று தேசிய கைத்தறி தினத்தில், இந்தியாவின் வளமான மற்றும் துடிப்பான கைத்தறி பாரம்பரியத்தை நாம் கொண்டாடுகிறோம். 

நமது நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் திறமை, படைப்பாற்றல் மற்றும் அர்ப்பணிப்புக்கும் நாம் வணக்கம் செலுத்துகிறோம். தலைமுறை தலைமுறையாக, அவர்கள் நமது பாரம்பரியங்களைப் பாதுகாத்து வளப்படுத்தி வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4