யாழ். சிறைச்சாலையைச் சுற்றி பாதுகாப்பு தீவிரம்!

#SriLanka #Jaffna #Prison #Lanka4 #Security #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY
Abi
1 hour ago
யாழ். சிறைச்சாலையைச் சுற்றி பாதுகாப்பு தீவிரம்!

நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் சிறைச்சாலையைச் சுற்றிய பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ன்று (07.08.2026) யாழ்ப்பாணம் சிறைச்சாலை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகளில் அண்மையில் பதிவாகியுள்ள மோதல்கள் மற்றும் பதற்றமான சம்பவங்களின் எதிரொலியாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யாழ்ப்பாணம் சிறைச்சாலை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, சிறைச்சாலையின் பிரதான நுழைவாயில் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாதுகாப்புத் தரப்பினர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதைத் தடுப்பதுடன், சிறைச்சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4