காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அதிரடி இடமாற்றம்!

#SriLanka #Police #Province #LANKA4 #Transfer #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அதிரடி இடமாற்றம்!

காவல்துறையின் உயர் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்கள் மற்றும் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, தென் மாகாண பிரதி காவல்துறை மா அதிபராகப் பணியாற்றிய கித்சிறி ஜயலத், ச ப் ரகமுவ மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பிரதி காவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தர, சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரப் பிரிவின் பொறுப்புகளுக்கு மேலதிகமாக, பயிற்சி மற்றும் மேம்பட்ட பயிற்சிப் பிரிவுகளின் பொறுப்புகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, விசேட பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் கே.பி. கருணாநாயக்க, வட மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், வட மாகாணத்திற்குப் பொறுப்பாகப் பணியாற்றிய பிரதி காவல்துறை மா அதிபர் எச்.பி. சிறிவர்தன, தென் மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!