டின் மீன் உற்பத்தி நிலையத்தில் CAA அதிரடி நடவடிக்கை

#SriLanka #Fish #Lanka4 #Factory #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 hour ago
டின் மீன் உற்பத்தி நிலையத்தில் CAA அதிரடி நடவடிக்கை

பன்னல, எலபடகம பகுதியில் இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLSI) செல்லுபடியாகும் அனுமதியின்றி இயங்கி வந்ததாகக் கூறப்படும் டின் மீன் உற்பத்தி நிலையமொன்றை நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர்.

சோதனையின்போது சுமார் ரூ.15 இலட்சம் பெறுமதியான டின் மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆரம்பகட்ட விசாரணைகளில், குறித்த உற்பத்தி நிலையத்தில் தயாரிக்கப்பட்ட டின் மீன்கள் பல்பொருள் அங்காடிகளுக்கு விநியோகிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. 

மேலும், சில டின் மீன் தயாரிப்புகளில் உற்பத்தித் திகதி குறிப்பிடப்படாமல் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சட்டவிரோத உற்பத்திகள், தரமற்ற உணவுப் பொருட்கள் அல்லது நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அலுவலக நேரங்களில் அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4