கடவுச்சீட்டு விநியோகத்தில் திடீர் பாதிப்பு – கணினிக் கோளாறால் பணிகள் முடக்கம்!
#SriLanka
#Passport
#Lanka4
#sudden
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று (11) முற்பகல் கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கடவுச்சீட்டுகளை வழங்கும் பணிகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த பத்திராஜவிடம் வினவியபோது, கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை விரைவாகச் சரிசெய்து, கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே