இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக எரிக் மேயர் பதவியேற்பு

#SriLanka #Ambassador #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 weeks ago
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக எரிக் மேயர் பதவியேற்பு

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக எரிக் மேயர் வொஷிங்டன் டி.சி.யில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இதன்மூலம், அமெரிக்கா – இலங்கை இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பதவியேற்பு நிகழ்வில் அமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் மஹிந்த சமரசிங்கவும் கலந்துகொண்டிருந்தார்.

மஹிந்த சமரசிங்க அண்மையில் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து இலங்கைக்குத் திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4