முகமாலை வயல் நிலங்களில் இரவு பகலாக சட்டவிரோத மணல் அகழ்வு

#SriLanka #Kilinochchi #illegal #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
முகமாலை வயல் நிலங்களில் இரவு பகலாக சட்டவிரோத மணல் அகழ்வு

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் வயல் நிலங்களில் இரவு பகலாக சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எந்தவித அனுமதியும் இன்றி உழவு இயந்திரங்களைப் பயன்படுத்தி குறித்த மணல் அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

முகமாலை கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலேயே இந்த சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4