பொறுப்புமிக்க முதலீடுகளுக்கு இலங்கையின் கதவுகள் திறந்தே உள்ளன

#SriLanka #PrimeMinister #ADDA #Harini Amarasooriya #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
பொறுப்புமிக்க முதலீடுகளுக்கு இலங்கையின் கதவுகள் திறந்தே உள்ளன

“வெளிப்படைத்தன்மை மிக்க நீண்டகால முதலீடுகளுக்கு இலங்கையின் கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன.

வர்த்தகத் துறையின் வளர்ச்சிக்கு அரசாங்கமாக நாம் உச்சக்கட்ட ஒத்துழைப்பை வழங்குவோம்.

எனினும், இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட முதலீடுகளையல்ல, மனித உரிமைகளையும் சுற்றாடலையும் பாதுகாக்கும் பொறுப்புமிக்க முதலீடுகளையே நாம் எதிர்பார்க்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் உலகளாவிய உடன்படிக்கை மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை ஆகியவை இணைந்து “Forward Faster Now” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்திருந்த ஆசிய – பசிபிக் பிராந்தியத்தின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை உள்ளடக்கிய முதலீட்டு மாநாடு நேற்று (12) கொழும்பில் இடம்பெற்றது.

இம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார மற்றும் வர்த்தகத் துறையின் வளர்ச்சிக்கு வெளிப்படையான, நீண்டகால மற்றும் பொறுப்புமிக்க முதலீடுகள் முக்கியமானவை எனவும், மனித உரிமைகள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முதலீடுகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4