உயிர்த்த ஞாயிறு வழக்கு: 17ஆம் திகதி அடுத்த கட்ட விசாரணை!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு தொடர்பான விசாரணையில், மனுதாரர் தரப்பு சாட்சியங்கள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளன. இதன்படி, எதிர்த்தரப்பு விசாரணைகள் எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய ஆயம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது. நீதிபதி நவரத்ன மாரசிங்க தலைமையில் சுஜீவ நிஷ்சங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகிய நீதிபதிகள் அடங்கிய ஆயமே வழக்கை விசாரித்து வருகிறது. நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
2023 ஒக்டோபர் 10ஆம் திகதி முதல் இதுவரை 547 சாட்சிகளிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 2,076 வழக்குச் சான்றுகளும் குறியீடு செய்யப்பட்டுள்ளன.
முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் பிரதிவாதிகளிடம் எதிர்த்தரப்பு வாக்குமூலங்களைப் பெறுவதற்கு போதுமான காரணங்கள் இருப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்த்தரப்பு விசாரணைகள் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பல்வேறு பகுதிகளில் தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்பியமை, ஆயுதப் பயிற்சி பெற்றமை, சதித்திட்டங்களைத் தீட்டியமை, தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்தியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், அனைத்து பிரதிவாதிகளுக்கும் எதிரான குற்றச்சாட்டு விபரங்களை முன்வைப்பதற்கு போதுமான தகவல்கள் இருப்பதாக நீதிமன்றம் திருப்தி தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நீதிமன்றத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஊடாக குற்றச்சாட்டு விபரங்கள் பிரதிவாதிகளுக்கு தமிழில் விளக்கிக் கூறப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு தொடர்பான விசாரணையில், மனுதாரர் தரப்பு சாட்சியங்கள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளன. இதன்படி, எதிர்த்தரப்பு விசாரணைகள் எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய ஆயம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது.
நீதிபதி நவரத்ன மாரசிங்க தலைமையில் சுஜீவ நிஷ்சங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகிய நீதிபதிகள் அடங்கிய ஆயமே வழக்கை விசாரித்து வருகிறது. நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
2023 ஒக்டோபர் 10ஆம் திகதி முதல் இதுவரை 547 சாட்சிகளிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 2,076 வழக்குச் சான்றுகளும் குறியீடு செய்யப்பட்டுள்ளன.
முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் பிரதிவாதிகளிடம் எதிர்த்தரப்பு வாக்குமூலங்களைப் பெறுவதற்கு போதுமான காரணங்கள் இருப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, எதிர்த்தரப்பு விசாரணைகள் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பல்வேறு பகுதிகளில் தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்பியமை, ஆயுதப் பயிற்சி பெற்றமை, சதித்திட்டங்களைத் தீட்டியமை, தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்தியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், அனைத்து பிரதிவாதிகளுக்கும் எதிரான குற்றச்சாட்டு விபரங்களை முன்வைப்பதற்கு போதுமான தகவல்கள் இருப்பதாக நீதிமன்றம் திருப்தி தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நீதிமன்றத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஊடாக குற்றச்சாட்டு விபரங்கள் பிரதிவாதிகளுக்கு தமிழில் விளக்கிக் கூறப்பட்டுள்ளன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே