கல்மடுநகர் சம்புகுளம் பிரதான வீதி ரூ.60 மில்லியன் செலவில் காபெட் வீதியாக அபிவிருத்தி

#SriLanka #government #Road #Mullaitivu #Lanka4 #Devolopment #L4
Prasu
2 hours ago
கல்மடுநகர் சம்புகுளம் பிரதான வீதி ரூ.60 மில்லியன் செலவில் காபெட் வீதியாக அபிவிருத்தி

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்மடுநகர் சம்புகுளம் பிரதான வீதி ரூ.60 மில்லியன் செலவில் காபெட் வீதியாக அபிவிருத்தி 1.3 கிலோமீற்றர் வீதி அபிவிருத்திக்கான அங்குரார்ப்பண நிகழ்வும் வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் இன்று இடம்பெற்றது.

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் – சம்புகுளம் மூலிகைப் பண்ணைக்குச் செல்லும் பிரதான வீதி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் ரூ.60 மில்லியன் செலவில் காபெட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படுவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.

கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், சுமார் 1.3 கிலோமீற்றர் நீளமான இவ்வீதி முதல் முறையாக காபெட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

images/content-image/1786727465.jpg

குறித்த வீதியானது அபிவிருத்தி பணிகள் மூன்று மாதத்திற்குள் நிறைவடைந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் மாயவனூர் பகுதியிலும் 55 மில்லியன் நிதி ஒதுக்கீடு இரண்டு கிலோமீட்டர் கார்பெட் வீதி புணரமைப்பு பணிகளும் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் இன்பராஜ் நளாயினி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் மருங்கன் மோகன் அவர்கள் கலந்துகொண்டார்.

இதன்போது உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் மருங்கன் மோகன் கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பயணத்தில் சம்புகுளம் கிராம மக்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளதாகத் தெரிவித்தார்.

images/content-image/1786727515.jpg

உள்நாட்டுப் போர் நிறைவடைந்த பின்னர், 2010ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பில் கேட்டறிவதற்காக மக்கள் விடுதலை முன்னணியின் உயர்மட்டக் குழுவினர் முதன்முறையாக சம்புகுளம் கிராமத்திற்கு வருகை தந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அப்போது தற்போதைய ஜனாதிபதியும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அனுர குமார திசாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியின் உயர்மட்டக் குழுவினர், கிராம மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததாகவும் தெரிவித்தார்.

இந்த அனுபவம் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பயணத்தில் சம்புகுளம் கிராமத்துடன் தொடர்புடைய முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுவதாகவும் அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணியின் பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் சம்புகுளம் கிராம மக்கள் பெருமளவில் பங்கேற்று வந்துள்ளதுடன், தேசிய மக்கள் சக்திக்கும் சம்புகுளம் மக்களுக்கும் இடையிலான நீண்டகால அரசியல் உறவு தொடர்ந்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன், நீர்ப்பாசனப் பொறியியலாளர், கரைச்சி பிரதேச சபையின் உப தவிசாளர், தேசிய மக்கள் சக்தியின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4