31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபு மற்றும் சுகன்யா ஜோடி

#Actor #Actress #TamilCinema #Lanka4 #Movie #L4
Prasu
2 hours ago
31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபு மற்றும் சுகன்யா ஜோடி

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தனது 21வது தயாரிப்பாக 'மேரிகோல்ட்' திரைப்படத்தை அறிவித்துள்ளது. 

ஆர். ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்தை பிரியன் ராஜேந்திரன் இயக்குகிறார். இந்தப் படத்தை சுதர்சன் இணைந்து தயாரித்துள்ளார்.

இந்த விறுவிறுப்பான கதையில், விஜய் டிவி புகழ் ரக்‌ஷன் மற்றும் நடிகை நம்ரிதா நடிக்கின்றனர்.

இந்நிலையில், 'செந்தமிழ்ப் பாட்டு', 'சின்ன மாப்ளே', 'மிஸ்டர் மெட்ராஸ்' ஆகிய படங்களில் இணைந்து நடித்த பிரபு மற்றும் சுகன்யா ஜோடி 31 ஆண்டுகளுக்கு பிறகு இணைகிறார்கள்.

images/content-image/1786736911.jpg

தென் தமிழகத்தின் பின்னணியில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி நகரங்களை சேர்ந்த கதை மாந்தர்களுக்கு இடையே நடைபெறும் சுவாரஸ்யமான போட்டியையும் அலாதியான வாழ்வியலையும் மையமாக கொண்டு ஒரு உணர்வுப்பூர்வமான குடும்ப கதையாக இத்திரைப்படம் உருவாகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4