திருகோணமலை பொது வைத்தியசாலையில் 3.1 கிலோ சிறுநீரகக் கல் அகற்றப்பட்டதாக தகவல்!
#SriLanka
#Trincomalee
#Hospital
#Lanka4
#kidney
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 hours ago
திருகோணமலை பொது வைத்தியசாலையில் 52 வயதுடைய நபரிடமிருந்து சுமார் 3 கிலோ 100 கிராம் எடையுடைய சிறுநீரகக் கல் சத்திர சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வைத்தியர்கள், மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர் இதில் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கல்லின் எடை தொடர்பான தகவல் உறுதிப்படுத்தப்பட்டால், இது மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமையக்கூடும்.
சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட திருகோணமலை பொது வைத்தியசாலை மருத்துவக் குழுவினருக்கு பாராட்டுக்கள்!
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே