தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சுதந்திர தின நிகழ்வை புறக்கணித்த ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற 80வது சுதந்திர தின கொண்டாட்டங்களை புறக்கணித்தனர்.
2024ம் ஆண்டில், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் அமைச்சரவை அமைச்சர் அந்தஸ்து பெற்றவராகவும் இருக்கும் ராகுல் காந்தி, செங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் மரபு மற்றும் நெறிமுறைகளுக்கு மாறாக கடைசிக்கு முந்தைய வரிசையில் அமர்ந்ததால் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது ஒரு சர்ச்சை வெடித்தது.
காங்கிரஸ் எம்.பி.க்கு அந்த இருக்கை ஒதுக்கப்பட்டது மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பாதுகாப்பு அமைச்சகம் ஒலிம்பிக் வீரர்களுக்கு இடமளிப்பதற்காக இந்த ஏற்பாடு மாற்றியமைக்கப்பட்டதாக வாதிட்டது.
மரபுப்படி, விழா நிகழ்வுகளின் போது எதிர்க்கட்சித் தலைவர் முதல் வரிசையில் அமர வேண்டும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே