கத்தாரில் சிறைபிடிக்கப்பட்ட 3 விமானிகளை விடுவிக்க ஈரான் கோரிக்கை

#Flight #Arrest #government #Lanka4 #Iran #Qatar #Pilot #L4
Prasu
2 hours ago
கத்தாரில் சிறைபிடிக்கப்பட்ட 3 விமானிகளை விடுவிக்க ஈரான் கோரிக்கை

மத்திய கிழக்கு போரின் போது கத்தாரில் சிறைபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் மூன்று விமானிகளை விடுவிக்க வேண்டும் என ஈரான் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

"போரின் போது Su-24 ரக போர் விமானங்கள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, மூன்று ஈரானிய விமானிகள் கத்தார் படைகளால் உயிருடன் சிறைபிடிக்கப்பட்டனர்" என்று ஈரானிய ஆயுதப் படைகளின் ஜெனரல் முகமது பாகர்சாதே குறிப்பிட்டுள்ளார்.

"ஜாவத் சலேஹி, அப்துல்மஜித் தஷ்டியன் மற்றும் ஓம்ரான் பெஹ்ரவேஷியன் ஆகியோர் ஆறு மாதங்களாக கத்தார் படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்" என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில், விமானிகள் தங்கள் குடும்பத்தினரைச் சந்திக்கவோ அல்லது தொடர்பு கொள்ளவோ ​​அனுமதிக்கப்படவில்லை என்று கூறிவிடுவிக்க வேண்டும் என பாகர்சாதே கோரிக்கை விடுத்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4