பளை இரகசிய முகாம் சர்ச்சை – உண்மை என்ன?
பளை பகுதியில் அரசுக்குச் சொந்தமான காப்புக்காட்டில் சுமார் 49 ஏக்கர் நிலம் சுத்தம் செய்யப்பட்டு, அங்கு இரகசியப் பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சங்கீத் டயசேகர தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த பகுதியில் அனுமதியின்றி மூன்று மாடிக் கட்டிடம் நிர்மாணிக்கப்படுவதாகவும், 100 முதல் 150 பேர் வரை பணியாற்றுவதாகவும், அந்த இடத்தின் செயற்பாடுகள் தொடர்பில் தேசிய பாதுகாப்பு ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், LANKA4க்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்படும் இடம் மற்றும் அங்கு நடைபெறும் செயற்பாடுகள் தொடர்பாக வேறுபட்ட தகவல்கள் கிடைத்துள்ளன.
கிடைத்த தகவல்களின்படி, பளை பகுதியில் கூறப்படுவது போன்று இரகசியப் பயிற்சி முகாம் ஒன்று இயங்குவதாக உறுதிப்படுத்தப்படவில்லை. மாறாக, பூநகரி – முக்கம்பன் பகுதியில் முன்னெடுக்கப்படும் தோட்டச் செய்கை (Plantation) நடவடிக்கையுடன் தொடர்புடைய இடமே தவறாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரியவருகிறது.
அப்பகுதியில் தோட்டச் செய்கை நடவடிக்கைகள் இடம்பெறுவதும், தொழிலாளர்கள் பணியாற்றுவதும் உண்மை எனக் கூறப்படுகிறது.
சில உள்ளூர்வாசிகளும் தமது வாழ்வாதாரத்திற்காக அங்கு பணிபுரிந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே