ஹசீனாவை நாடு கடத்த வேண்டும்: தாரிக் ரஹ்மான் இந்திய பயணம் தாமதம்?

#India #LANKA4 #World #Visit #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 month ago
ஹசீனாவை நாடு கடத்த வேண்டும்: தாரிக் ரஹ்மான் இந்திய பயணம் தாமதம்?

மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட ஹசீனாவுக்கு பங்களாதேஷில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை நாடு கடத்தி ஒப்படைக்குமாறு டாக்கா தொடர்ந்து இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து வருகிறது.

எதிர்வரும் வாரத்தில் பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியாவுக்கு விஜயம் செய்யக்கூடும் என செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், இதற்கு இரு நாடுகளுக்கும் இடையில் பொருத்தமான சூழல் உருவாக வேண்டும் என பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஏ.கே.எம். ஷாஹிதுல் கரீம் தெரிவித்துள்ளார்.

மேலும், ஷேக் ஹசீனா உள்ளிட்ட குற்றவாளிகளை விரைவாக நாடு கடத்துமாறு இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்துகொண்டு ஷேக் ஹசீனா ஊடகங்களுக்கு வழங்கி வரும் பகிரங்க கருத்துகள், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைச் சூழலை பாதித்து வருவதாகவும் பங்களாதேஷ் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் பிரதமராகப் பதவியேற்ற தாரிக் ரஹ்மான், தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்குச் செல்லாமல் மலேசியா மற்றும் சீனாவுக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்நிலையில், பங்களாதேஷ் முன்வைத்துள்ள ஷேக் ஹசீனாவின் நாடுகடத்தல் கோரிக்கையை ஆராய்ந்து வருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!