உயிர்த்த ஞாயிறு வழக்கு: பிரதிவாதிகள் தரப்பு சாட்சிய பதிவு தொடங்க உத்தரவு

#SriLanka #Easter Sunday Attack #LANKA4 #Case #Court #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
2 months ago
உயிர்த்த ஞாயிறு வழக்கு: பிரதிவாதிகள் தரப்பு சாட்சிய பதிவு தொடங்க உத்தரவு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரிக்கும் நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம், இன்று (17) முதல் பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களை அழைக்க உத்தரவிட்டுள்ளது.

அரசத் தரப்பு சாட்சியங்கள் நிறைவடைந்ததை அடுத்து, 24 பிரதிவாதிகளுக்கும் எதிராகச் சாட்சியங்களை அழைக்கப் போதுமான காரணங்கள் உள்ளதாக நீதிபதிகள் குழாம் தீர்மானித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம், பிரதிவாதிகள் தரப்பு சாட்சியமளிக்க அழைப்பு விடுத்ததுடன், ஒவ்வொரு பிரதிவாதிக்கும் உரிய உரிமைகள் குறித்தும் விளக்கமளித்தது. அத்துடன், அனைத்துப் பிரதிவாதிகளையும் தமது நிலைப்பாட்டை அறிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்போது, 6 ஆவது பிரதிாவதியான மொஹமட் ரிஸ்வான், தான் சாட்சியமளிக்கப் போவதில்லை எனவும் மௌனம் காக்கப் போவதாகவும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

ஏனைய பிரதிவாதிகள் கூண்டிலிருந்து சாட்சியமளிப்பது, கூண்டிலிருந்து அறிக்கை சமர்ப்பிப்பது அல்லது வெளியிலிருந்து சாட்சியங்களைச் சமர்ப்பிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் உல்லாச விடுதிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் சுமார் 224 பேர் கொல்லப்பட்டதுடன் 584 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது பயங்கரவாதக் குழுவினரின் செயற்பாடுகள் தொடர்பில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இதுவரை இடம்பெற்றுள்ள விசாரணைகளில் சுமார் 1,500 சாட்சிகள் சாட்சியமளித்துள்ளதுடன், ஆவணங்கள், குண்டு தயாரிக்கும் பொருட்கள் உள்ளிட்ட 2,076 நீதிமன்றப் பொருட்கள் அரசுத் தரப்பினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!