லஞ்சம் குற்றச்சாட்டில் சாய்ந்தமருது பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது

#SriLanka #Arrest #Police #Lanka4 #Bribery #L4
Prasu
2 hours ago
லஞ்சம் குற்றச்சாட்டில் சாய்ந்தமருது பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது

அண்மையில் கைதான போதைப்பொருள் சந்தேகநபர் ஒருவரை சட்ட நடவடிக்கைகளில் இருந்து விடுவிப்பதற்கு உதவ நடவடிக்கை எடுப்பதாகக் கூறி 20 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் தர உத்தியோகத்தர் ஒருவரும், சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி தற்போது பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக செயற்பட்டு வரும் பொலிஸ் பரிசோதகர் (இன்ஸ்பெக்டர்) ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4