கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம் முடிவு - 9 இஸ்லாமிய பெண் சுகாதார உதவியாளர்கள் இடமாற்றம்

#SriLanka #Parliament #Hospital #Kalmunai #Lanka4 #Member #Nurse #L4
Prasu
1 hour ago
கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம் முடிவு - 9 இஸ்லாமிய பெண் சுகாதார உதவியாளர்கள் இடமாற்றம்

கல்முனை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட 37 சுகாதார உதவியாளர்களில் 9 பேர் இஸ்லாமிய பெண்கள். அவர்களது சீருடை தொடர்பான பிரச்சினைக்கு சுகாதார அமைச்சு தீர்க்கமான முடிவை அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த 9 இஸ்லாமிய பெண் சுகாதார உதவியாளர்களையும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நாளை விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இதனுடன் சீருடை விவகாரம் முடிவுக்கு வருகிறது” என்று கவிந்திரன் கோடீஸ்வரன் MP குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4