கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம்: நிரந்தரத் தீர்வுக்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை!
கல்முனை உள்ளிட்ட வைத்தியசாலைகளில் பணியாற்றும் முஸ்லிம் இளநிலை ஊழியர்கள் மற்றும் செவிலியர் அதிகாரிகளின் சீருடை தொடர்பான பிரச்சினைக்கு உடனடி, குறுகியகால மற்றும் நீண்டகால நிரந்தரத் தீர்வுகளை வழங்க சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
சுகாதார அமைச்சரின் தலைமையில் இன்று (18) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இது தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடலில் ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் மற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று, கடந்த சில நாட்களாக பேசுபொருளாகியுள்ள சீருடை விவகாரம் தொடர்பாக தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.
வைத்தியசாலை சேவைகள் சீராக நடைபெறுவதையும், சம்பந்தப்பட்ட ஊழியர்களின் உரிமைகள் மற்றும் அனைத்து தரப்பினரின் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் நடைமுறைக்கு ஏற்ற தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
மேலும், தற்போதைய பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண்பதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாத வகையில் நீண்டகால நிரந்தரத் தீர்வை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே