ஊழல் குற்றச்சாட்டு: அகில விராஜ் காரியவசம் இன்று நீதிமன்றத்தில்!

#Lanka4 #Court #Allegation #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
ஊழல் குற்றச்சாட்டு: அகில விராஜ் காரியவசம் இன்று நீதிமன்றத்தில்!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இன்று (18) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராகப் பணியாற்றிய காலத்தில், தனது பணிக்குழுவுக்காக நான்கு ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்ததாகவும், அவர்களில் மூவரை தனக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணியமர்த்தியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், மற்றொரு ஊழியரை ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில் பணியில் ஈடுபடுத்தாமல், குறித்த ஊழியர்களுக்கு அரசாங்கத்தினால் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக ரூ. 2,768,836.14 வழங்கச் செய்து அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்திற்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கியதாகக் கூறப்படும், அகில விராஜ் காரியவசத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4