ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் 10 ஏக்கர் காணி விவகாரம் பிரதி அமைச்சர் கவனத்திற்கு!
#SriLanka
#Minister
#Lanka4
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
கடந்த அரசாங்கத்தினால் ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட 10 ஏக்கர் காணி, இதுவரை பாடசாலைக்கு வழங்கப்படாத விவகாரம் தொடர்பில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பாடசாலை நிர்வாகத்தினருடன் நடைபெற்ற சந்திப்பின்போது, குறித்த காணி தொடர்பான உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு பிரதி அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மேலும், ஆவணங்களைப் பரிசீலித்து இந்தக் காணிப் பிரச்சினைக்கு விரைவில் உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
பாடசாலை அதிபர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற இந்தச் சந்திப்பு, பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே