22வது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு!

#SriLanka #Lanka4 #HighCourt #Amendment #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 hour ago
22வது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு!

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூல வரைவு, அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் முதலாவது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொருளாளர் டி.எம்.எஸ். பசிந்து சில்வா மற்றும் அதன் உதவிச் செயலாளர் ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதாயின், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டு, அது சர்வஜன வாக்கெடுப்பு மூலமும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என உத்தரவிடுமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.

முன்னதாக, நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பது தொடர்பான திருத்தங்கள் அடங்கிய அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் இன்றைய தினம் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4