கண்டி எசல பெரஹெரவை முன்னிட்டு 11 நாட்களுக்கு மூடப்படும் மதுக்கடைகள்
கண்டி எசல பெரஹெரவை முன்னிட்டு, இன்று (18) முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பல மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு கலால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கண்டி எசல பெரஹெரவின் முதல் கும்பல் பெரஹெர இன்று வீதிகளில் பவனி வரவுள்ள நிலையில், பெரஹேரா நிறைவடையும் 28ம் திகதி வரை இந்த மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கண்டி கடவத்த சதாரா மற்றும் கங்காவத்த கோரள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படவுள்ளன.
மேலும், குண்டசாலை பிரதேச செயலகத்தின் நத்தாரம்போத்த கிராம அலுவலர் பிரிவில், பிரதான வீதியை ஒட்டியுள்ள எரிபொருள் நிலையம் வரையிலான பகுதிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படவுள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
எசல பெரஹெரவை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே