படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய நடிகர் அருண் விஜய்

#Accident #Actor #TamilCinema #Hospital #Lanka4 #Movie #L4
Prasu
2 hours ago
படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய நடிகர் அருண் விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் அருண் விஜய்க்கு படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’, ‘விருமன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் ‘இருளன்’ திரைப்படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் மிர்ணா மேனன், சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ‘இருளன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சண்டைக் காட்சி படமாக்கப்பட்டபோது எதிர்பாராத விதமாக அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டுள்ளது. 

சண்டைக் காட்சியின்போது அவரது தொடை தசைப் பகுதியில் அடிபட்டு காயம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4