ரத்தம் சிந்தும் தாக்குதல்களுக்கு உடந்தையாக செயல்படுவதாக பிரித்தானியா மீது குற்றச்சாட்டு

#Attack #Russia #Ukraine #War #Lanka4 #Drone #England #L4
Prasu
3 hours ago
ரத்தம் சிந்தும் தாக்குதல்களுக்கு உடந்தையாக செயல்படுவதாக பிரித்தானியா மீது குற்றச்சாட்டு

பிரித்தானியா தயாரித்த இரண்டு ட்ரோன்கள் ரஷ்யாவின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது.

பிரித்தானியா போரை மேலும் தீவிரப்படுத்துவதாகவும், ரத்தம் சிந்தும் தாக்குதல்களுக்கு உடந்தையாக செயல்படுவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக பிரித்தானிய உதிரிபாகங்கள் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளைப் பயன்படுத்திய ட்ரோன்கள் ரஷ்யாவின் ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உள்ள எரிபொருள் கிடங்கு உள்ளிட்ட இலக்குகளைத் தாக்கியதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரஷ்யாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பிரித்தானியா உக்ரைனுக்கான ஆதரவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனுடன் உறுதியாக நிற்பதாகவும், தற்காப்புக்குத் தேவையான ஆயுதங்களைத் தொடர்ந்து வழங்குவதாகவும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4