2028 முதல் இலங்கை மீண்டும் கடன் செலுத்த வேண்டும்: ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை!
சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) ஒப்பந்தம் வரும் 2027-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடையும் நிலையில், 2028ஆம்ஆண்டுக்குப் பிறகு இலங்கை மீண்டும் வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதிரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய எழுதிய "யுத தெக்கட உர தீ" என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிலையில் 2028-க்குப் பிறகு கடன்களை மறுசெலுத்துகை செய்ய இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கிறது.
எனினும், இந்த வருட முடிவில் மத்திய வங்கி 8 பில்லியன் டொலர்கள் கையிருப்பை மட்டுமே எதிர்பார்க்கிறது.
இதன் காரணமாக, மேலும் 6 பில்லியன் டொலர்களைத் தேட வேண்டிய நிலை ஏற்படும் என அவர் வலியுறுத்தினார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே