திருகோணமலையில் தீ விபத்தில் உயிரிழந்த 31 வயது புதுமணப்பெண்
திருகோணமலை, நிலாவெளிப் பகுதியில் புதுமணப்பெண் ஒருவர் குப்பைக்கு தீவைத்தபோது உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் நிலாவெளி இக்பால் நகரைச் சேர்ந்த 31 வயதுடைய இளம் யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த மே மாதம் 20ம் திகதி திருமணம் செய்துகொண்ட இவருக்கு, கடந்த 6ம் திகதி வீட்டு வளாகத்தில் குப்பைகளை எரியூட்டும்போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
குப்பைகளை எரியூட்டுவதற்கு மண்ணெண்ணெய் கிடைக்காத காரணத்தால், வீட்டில் எஞ்சியிருந்த பெயிண்ட் தின்னர்(Paint Thinner) திரவத்தைப் பயன்படுத்தியுள்ளார். அதிலிருந்து பரவிய தீ அவரது ஆடைகளிலும் பிடித்துள்ளது.
இதனால் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான அவர், முதலில் திருகோணமலை பொது வைத்தியசாலையிலும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி கடந்த 14ம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே