ஒன்பது மாதங்களுக்கு பிறகு மனைவி மற்றும் சகோதரியை சந்தித்த இம்ரான் கான்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்த கவலைகளுக்கு மத்தியில், சிறையில் உள்ள அந்தத் தலைவர் வாரந்தோறும் குடும்பத்தினரைச் சந்திக்க நாட்டின் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அவர் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் தனது சகோதரியையும் மனைவியையும் முதன்முறையாகச் சந்தித்துள்ளார்.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் அரசியல் கட்சியின் நிறுவனரான கான், பல வழக்குகளை எதிர்கொண்டு 2023 முதல் அடியாலா சிறையில் அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், அவரது சகோதரி நொரீன் நியாசி, இந்த ஆண்டு முதன்முறையாக அவரை 15 நிமிடங்கள் சந்தித்தார். இருவரும் சிறையின் மாநாட்டு அறையில் சந்தித்து, அவரது உடல்நிலை மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாகத் தெரிவித்துள்ளது.
மருத்துவப் பரிசோதனைக்காக அவரை ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவு குறித்தும் நொரீன் அவருக்குத் தெரிவித்துள்ளார்.
சந்திப்பு குறித்த கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை, ஏனெனில், அரசியல் ஆதாயத்திற்காக சந்திப்பைப் பயன்படுத்தினால், கானுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் திரும்பப் பெறப்படும் என்று உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் சம்பந்தப்பட்ட தரப்பினரை எச்சரித்திருந்தது.
கானின் மற்ற சகோதரிகளான அலீமா கான் மற்றும் உஸ்மா கான், மற்றும் அவரது உறவினரான காசிம் ஜமான் ஆகியோர் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.
இதற்கிடையில், சிறையில் உள்ள கானின் மனைவி புஷ்ரா பீபியும் சிறையில் உள்ள ஒரு மாநாட்டு அறையில் தனது குடும்பத்தினரைச் சந்தித்தார்.
கான் தனது மனைவியுடன் நடத்திய சந்திப்பு சுமார் 30 முதல் 35 நிமிடங்கள் நீடித்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள புஷ்ரா பீபியும் தனது குடும்பத்தினரைச் சந்தித்தார். அவரது பிள்ளைகள் மூசா மற்றும் முபஷரா மனேகா மற்றும் நாத்தனார் மெஹருன்னிசா ஆகியோருடனான சந்திப்பு 40 நிமிடங்கள் நீடித்தது.
விவாகரத்தில் முடிந்த அவரது முதல் திருமணத்தின் மூலம் இந்தப் பிள்ளைகள் பிறந்தவர்கள், அதன் பிறகு அவர் கானை மணந்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே