1716ஆவது கண்டி தலதா எசல பெரஹெரா: 2ஆவது கும்பல் பெரஹெரா கோலாகலம்
2026ஆம் ஆண்டுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையின் எசல பெரஹெராவின் 2ஆவது கும்பல் பெரஹெரா நேற்று (19) இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.
இலங்கை கலாச்சாரத்தின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் 1716ஆவது தலதா பெரஹெரா, நேற்று மாலை 6.41 மணிக்கு சுபவேளையில் தனது வீதியுலாவை ஆரம்பித்தது.
25 ஆண்டுகளுக்குப் பின்னர், 2ஆவது கும்பல் பெரஹெராவில் புனித தந்த தாதுவை சுமந்து செல்லும் பாக்கியம் தலதா மாளிகையின் ‘ஜனராஜா’ யானைக்கு கிடைத்தது.
இதன் இருபுறமும் ‘மியன் ராஜா’ மற்றும் ‘சிங்க ராஜா’ யானைகள் அணிவகுத்துச் சென்றன. தலதா மாளிகைக்கு அருகில் ஆரம்பமான பெரஹெரா, நான்கு மகா தேவாலய பெரஹெராக்களுடன் இணைந்து லேக் வீதி, தலதா வீதி, டி.எஸ். சேனநாயக்க வீதி மற்றும் ராஜா வீதி வழியாகச் சென்று மீண்டும் தலதா மாளிகையை வந்தடைந்தது.
இதனிடையே, 3ஆவது கும்பல் பெரஹெரா இன்று (20) இரவு வீதியுலா வரவுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே