கல்முனை வடக்கு மருத்துவமனை ஆடை விவகாரம்: அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் ஏற்பட்ட ஆடை விவகாரம் இன, மத மோதலாக மாறாமல் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் முன்வைத்த ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், சமூக ஊடகங்களிலும் வெளியிலும் வாக்கு வங்கியை இலக்காகக் கொண்டு இனவாத உணர்வுகளைத் தூண்டும் நடவடிக்கைகளை அரசாங்கம் அனுமதிக்காது எனக் குறிப்பிட்டார்.
சுகாதாரத் துறையில் நடைமுறையில் உள்ள சீருடை விதிமுறைகள் நீண்டகால கலந்துரையாடல்கள் மற்றும் சீருடைக் குழுவின் ஆலோசனைகளின் பின்னரே தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, பாரம்பரிய ஆடை தொடர்பான காரணங்களால் ஒருவர் அரச சேவையில் இணைவது தடுக்கப்படுவதை அரசாங்கம் ஆதரிக்காது எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
எதிர்காலத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து சமூகத்தினரும் சுகாதாரத் துறையில் இணைவதற்கும், அவர்களின் மத மற்றும் கலாசார உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாட அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“ஆடை விவகாரம் இனவாத மோதலாக மாறக்கூடாது” – நாடாளுமன்றில் அரசாங்கம் வலியுறுத்தல்
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே