சம்மாந்துறை நீச்சல் தடாகம் விரைவில் திறப்பு!

#SriLanka #Lanka4 #Swimming_Pool #Open #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
53 minutes ago
சம்மாந்துறை நீச்சல் தடாகம் விரைவில் திறப்பு!

சம்மாந்துறை ஜனாதிபதி கலாச்சார விளையாட்டு நிலையத்தில் நீண்டகாலமாக செயலற்றிருந்த நீச்சல் தடாகத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான மறுசீரமைப்புப் பணிகள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பல மாதங்களாக நீச்சல் தடாகம் மூடப்பட்டிருந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

இதனையடுத்து, சம்மாந்துறை பிரதேச சபையின் நடைமுறைச் சவால்களுக்கு மத்தியில், தவிசாளர் துரிதமாக நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது திருத்தப் பணிகள் மற்றும் பூர்வாங்க நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருவதுடன், நீச்சல் தடாகம் விரைவில் முழுமையான பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் பிரதேசத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4