மஹாநாயக்க தேரர்களை சந்தித்த இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

#SriLanka #Minister #LANKA4 #ADDA #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
மஹாநாயக்க தேரர்களை சந்தித்த இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் இன்று (20) கண்டி மல்வத்து விகாரைக்குச் சென்று, மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது நாட்டின் தற்போதைய நிலைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து, மல்வத்து பீடத்தின் அநுநாயக்கர் சங்கைக்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரரையும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் சந்தித்து கலந்துரையாடினார்.

பின்னர் அஸ்கிரி விகாரைக்குச் சென்ற அவர், அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் சங்கைக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரரை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அண்மையில் எழுதி வெளியிட்ட சிங்கள மொழியிலான நூல்களின் பிரதிகளையும் மகாநாயக்க தேரர்களிடம் கையளித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4