வடக்கு மாகாண தெங்கு உற்பத்தி திணைக்களத்தில் ஆளனி பற்றாகுறை - அரசாங்கம் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு!

#SriLanka #NorthernProvince #government #Coconut #LANKA4 #Production #L4
Prasu
2 hours ago
வடக்கு மாகாண தெங்கு உற்பத்தி திணைக்களத்தில் ஆளனி பற்றாகுறை - அரசாங்கம் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு!

வடக்கு மாகாண தெங்கு உற்பத்தி திணைக்களத்தில் ஆளனிகள் நிரப்பப்படாமையால் நமது பணிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக்கவும், அரசாங்கம் வடக்கு மாகணத்தை புறக்கணிப்பதாகவும், வட மாகாண தெங்கு முக்கோண வலய உதவி பொது முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் தெரிவித்துள்ளார். 

அவர் வடமராட்சி கிழக்கில் தென்னை உற்பத்தியை மேம்படுத்துவது தொடர்பாக பயனாளிகளுடன் இடம் பெற்ற சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அதனை தொடர்ந்து, வட மாகாணத்தில் தெங்கு பயிர் செய்கை சபைக்கு ஒரே ஒரு தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் மட்டும் பணியாற்றுவதாகவும் 3 தென்னை அபிவிருத்தி உதவியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளதாகவும் தமக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்ட போதும் இதுவரை ஆளனி நியமனங்கள் எதுவும் நிரப்பப்படாமலுள்ளதாகவும் இதனால் தம்மாலான பணியை உரிய முறையில் மேற்கொள்ள முடியாதுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையில் தற்போது தேங்காய் விலை அதிகரிப்பிற்கு காரணம் தேங்காய் உற்பத்தி மிக குறைவாக உள்ளமையே என்றும் மிகவும் குறைவான தேங்காய் உற்பத்தியிலிருந்த வடக்கு மாகாணம் தற்போது தேங்காய் உற்பத்தியில் அதிகரித்து காணப்படுவதாகவும் இதற்கு வடக்கு தென்னை முக்கோண வலையம் உருவாக்கப்பட்டமையே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு மாகானம் மொத்த தேசிய உற்பத்தியில் கடைசி நிலையில் உள்ளதாகவும், கிழக்கு மாகாணம் 5 வது இடத்திலுள்ளதாகவும், வடக்கு மாகாணத்தில் அதிகளவான வளங்கள் இருக்கின்ற போதும் மொத்த தேசிய உற்பத்திக்கு பங்களிக்கும் விதம் இதுவரை குறைவாக காணப்படுவதாகவும், வளர்ந்து வரும் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப வடக்கு மாகாணம் போட்டி போட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம் என்றும், வட மாகாணத்தில் பாரியளவிலான எந்த விதமான கைத்தொழில் சாலைகளும் உருவாக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் தென்னை மரங்களில் வெள்வண்டு தாக்கம் அதிகரித்திருக்கின்றது. ஏனைய மாகாணங்களில் கட்டுப்படுத்தப் பட்டிருக்கின்ற போதும் வடக்கு மாகாணத்தில் வெள்வண்டு தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும், அதற்கு அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெள்வண்டு தாக்கம் வடக்கு கிழக்கில் மட்டுமே இருக்கின்ற போதும், நாங்கள் இது தொடர்பில் பேசுகின்ற போது அமைச்சர்கள் கண்டுகொள்வதில்லை என்றும், வெள்வண்டு தாக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் அரசாங்க உத்தியோக பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், தற்போது வெள்வண்டு தாக்கத்தை காட்டுப்படுத்த வேறு ஒரு உயிரினத்தை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4