50 புதிய வீடுகளை கையளிக்க பதுளை வரும் ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸாநாயக

#SriLanka #people #Badulla #LANKA4 #President #AnuraKumaraDissanayake #House #L4
Prasu
2 hours ago
50 புதிய வீடுகளை கையளிக்க பதுளை வரும் ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸாநாயக

பதுளை, ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கபரகல பகுதியில் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 50 புதிய வீடுகள் எதிர்வரும் 2ம் திகதி பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, புதிய வீடுகளை பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கவுள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக சொந்த வீட்டு வசதியை எதிர்பார்த்திருந்த மலையக மக்களுக்கு, இந்த வீடுகள் புதிய நம்பிக்கையையும் பாதுகாப்பான வாழ்விடத்தையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4