‘தி ஒடிசி’ படைத்த புதிய சாதனை!

#Cinema #LANKA4 #Word #Record #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
‘தி ஒடிசி’ படைத்த புதிய சாதனை!

கிறிஸ்டோபர் நோலனின் பிரம்மாண்ட திரைப்படமான ‘தி ஒடிசி’ (The Odyssey), உலகளாவிய திரையரங்கு வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. ‘வெரைட்டி’ தகவலின்படி, இப்படம் உலகம் முழுவதும் 1.352 பில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்து, இதுவரை வெளியான அதிக வசூல் செய்த R-rated திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

இதன்மூலம், 2024ஆம் ஆண்டு வெளியான ‘டெட்பூல் & வோல்வரின்’ திரைப்படத்தின் 1.338 பில்லியன் டாலர் வசூல் சாதனையை ‘தி ஒடிசி’ முறியடித்துள்ளது. ஜூலை 17ஆம் தேதி வெளியான இப்படம், உள்நாட்டில் தொடக்க வார இறுதியில் மட்டும் 123 மில்லியன் டாலர் வசூலித்தது. 

இதுவரை அமெரிக்காவில் 516 மில்லியன் டாலரும், சர்வதேச அளவில் 835 மில்லியன் டாலரும் வசூலித்துள்ளது. மேலும், இது கிறிஸ்டோபர் நோலனின் திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாகவும், மேட் டாமன், ஆன் ஹாத்வே, ராபர்ட் பாட்டின்சன் மற்றும் டாம் ஹாலண்ட் ஆகியோரின் தனிப்பட்ட திரைப்பயணங்களிலும் அதிக வசூல் செய்த படமாகவும் மாறியுள்ளது.

ஒடிசியின் கதை ஹோமரின் பண்டைய கிரேக்க காவியத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படம், ட்ரோஜன் போருக்குப் பிறகு தனது மனைவி பெனிலோப் மற்றும் மகன் டெலிமாக்கஸ் ஆகியோருடன் மீண்டும் இணைய மன்னர் ஒடிசியஸ் மேற்கொள்ளும் ஆபத்தான பயணத்தை மையமாகக் கொண்டுள்ளது.

இந்தப் பயணத்தில் புராண உயிரினங்கள் மற்றும் பல்வேறு ஆபத்துகளை அவர் எதிர்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேட் டாமன், ஆன் ஹாத்வே, டாம் ஹாலண்ட், ஜெண்டயா, ராபர்ட் பாட்டின்சன், சார்லிஸ் தெரான், லுபிடா நியாங்கோ, எலியட் பேஜ், மியா கோத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4