கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக வெப்பநிலை!

#SriLanka #Province #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
5 hours ago
கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக வெப்பநிலை!

கிழக்கு மாகாணம், பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலை உணரப்படக்கூடும். சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் 75 மி.மீ.க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை, மன்னார் ஊடாக சிலாபம் வரையிலும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும் காற்றின் வேகம் 50–60 கி.மீ.க்கும் அதிகமாக அதிகரிக்கக்கூடும்.

இதனால் கடல் கொந்தளிப்பாக காணப்படலாம். புத்தளம் முதல் கொழும்பு, காலி, மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் அலைகள் 2.0–2.5 மீற்றர் உயரம் வரை எழக்கூடும்.

பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மற்றும் கடல்சார் பணியாளர்கள் விசேட அவதானத்துடன் செயற்படவும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4