இலங்கைக்கான புதிய 11 வெளிநாட்டு தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளிப்பு!

#SriLanka #LANKA4 #President #AnuraKumaraDissanayake #Ambassador #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
இலங்கைக்கான புதிய 11 வெளிநாட்டு தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளிப்பு!

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 07 தூதுவர்கள் மற்றும் 04 உயர்ஸ்தானிகர்கள் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

பிரேசில், சீனா, ஆஸ்திரியா, அமெரிக்கா, டொமினிக்கன் குடியரசு, சூடான் மற்றும் பனாமா ஆகிய நாடுகளின் தூதுவர்களும், பங்களாதேஷ், கானா, புரூணை தாருஸ்ஸலாம் மற்றும் கயானா ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்களும் இதில் அடங்குகின்றனர்.

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையுடனான தற்போதைய இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஒன்றிணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுத்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4