கடமை நேரத்தில் சமூக வலைத்தளங்களுக்கு தடை – தொடருந்து திணைக்களம் அதிரடி!

#SriLanka #Department #LANKA4 #Social Media #hours #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
2 months ago
கடமை நேரத்தில் சமூக வலைத்தளங்களுக்கு தடை – தொடருந்து திணைக்களம் அதிரடி!

கடமை நேரங்களின் போது சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது மற்றும் தொடருந்து இயக்க நடவடிக்கைகள் தொடர்பான உணர்திறன் வாய்ந்த தகவல்களைச் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதைத் தடுப்பது தொடர்பில் தொடருந்து திணைக்களம் விசேட சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

சுற்றுநிருபத்தின் அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தொடருந்து பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட குறித்த சுற்றுநிருபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடருந்து திணைக்களத்தின் சில அதிகாரிகளும் ஊழியர்களும் கடமை நேரங்களிலும் அதற்குத் தொடர்புடைய சந்தர்ப்பங்களிலும் சமூக வலைத்தளங்கள் ஊடாக உணர்திறன் வாய்ந்த தகவல்களை வெளிப்படுத்தும் போக்கு அவதானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உணர்திறன் வாய்ந்த தகவல்களைச் சமூக வலைத்தளங்கள் மூலம் பகிரங்கப்படுத்துவதன் மூலம் தொடருந்து சேவையின் நம்பகத்தன்மை, பயணிகள் பாதுகாப்பு மற்றும் நிறுவன ஒழுக்கம் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படுவதால் இந்தச் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தொடருந்து பொது முகாமையாளர், தொடருந்து திணைக்கள உத்தியோகப்பூர்வ ஊடகப் பேச்சாளர் மற்றும் தகவல் அதிகாரி ஆகியோருக்கு மட்டுமே தொடருந்து திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ தகவல்களை வெளித்தரப்பினருக்கோ அல்லது ஊடகங்களுக்கோ வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்தப் புதிய சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!