300 கிலோவாட்டுக்கு மேற்பட்ட கூரை சோலார் மின்கலன்களை நிறுத்துமாறு கோரிக்கை!

#SriLanka #LANKA4 #suspend #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
300 கிலோவாட்டுக்கு மேற்பட்ட கூரை சோலார் மின்கலன்களை நிறுத்துமாறு கோரிக்கை!

300 கிலோவாட்டிற்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கூரைமேல் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கலன்களை எதிர்வரும் 30ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு எரிசக்தி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

கட்டமைப்பு முகாமைத்துவ நிறுவனத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை, காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரையான காலப்பகுதியில் 300 கிலோவாட்டிற்கும் அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் கூரை சூரிய மின்கலன்களை நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மின்சாரக் கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4